சமோசா
தேவையான பொருட்கள்
மைதா மாவு : 125 கிராம்
வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி
உருளை கிழங்கு : ½ கிலோ
மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி
பச்சைபட்டாணி : 100 கிராம்
பெரிய வெங்காயம் : ¼ கிலோ
மல்லிஇலை : 25 கிராம்
பச்சைமிளகாய் : 2
கடலை எண்ணெய் : ¼ கிலோ
இஞ்சி : சிறுதுண்டு
சீரகம் : ½ தேக்கரண்டி
கரம் மசாலா : 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு : 1 தேக்கரண்டி
உலர்ந்ததிராட்சை : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையானது
கான் ப்ளார் மாவு : 3 தேக்கரண்டி
தாளிக்க
சீரகம் : ½ தேக்கரண்டி
கடுகு : ½ தேக்கரண்டி
கருவேப்பிலை: 1 கொத்து
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு, கரம் மசாலா வேக வைத்த பச்சை பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின் கலவையை நன்கு வதக்கி பின்னர் ஆறவைக்கவும்.
பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு சப்பாத்தியின் இருபுறமும் லேசாக வேக வைத்து ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயில் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான சமோசா ரெடி!
சுவையான வெஜிடபிள் சமோசா
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 250 கிராம்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் - 10,
சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
வனஸ்பதி 50 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சீரகத்தூள், லேசாக சூடாக்கிய வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்த பின் நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் முந்திரி சேர்த்து, வறுத்த பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் போட்டுக் கிளறிய பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
* நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் வடிவில் செய்து, உருளைக்கிழங்கு மசாலாவை 3 ஸ்பூன் எடுத்து உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து, செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.
குறிப்பு: சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment