வெல்லச் சீடை
தேவையானவை:
சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு ..... 1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு ..... 3 டீஸ்பூன்
வெல்லத்தூள் ..... அரை கப். ( பாகு வெல்லமாக )
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் .. 2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் ..... அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி ..... சிறிது
நெய் ..... 2 டீஸ்பூன்.
சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
செய்முறை .......
ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.
15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++
உப்புச் சீடை
தேவையானவை:
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு ... 2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது ... கால்கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு ... 1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் .... 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி .... அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள் .... 1 டீஸ்பூன்
வேண்டிய அளவு எண்ணெய் ... சீடை வேக வைக்க
செய்முறை ......
உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து சேர்த்து
அழுத்திப் பிசறவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்
10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
+++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment