மறந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்!!!
குதிரைவாலி எள்ளுசாதம்
தேவையான பொருட்கள்
குதிரைவாலி சாதம் - ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு,
கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
எள்ளைத் தண்ணீர் விட்டுக் நன்றாக கழுவி கல் இல்லாமல் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள். வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள். ஆறியதும் மிக்சியில் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள். வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி எள் சாதம் தயார்.
++++++++++++++++++++++++++++++++++++++++
வலுவூட்டும் வரகு கஞ்சி !
சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்லப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.
சத்துக்கள் ?
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.
எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
தொட்டுக்கொள்ள?
கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்தத் துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++
மருத்துவ உணவுகள்..!
பிரண்டைத் துவையல்..!
தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம்,
மிளகு - 20,
பச்சை மிளகாய் - 3,
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.
மருத்துவப் பயன்:
குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.
+++++++++++++++++++++++++++++++++++
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் !
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது
சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
கொத்தமல்லி தழை
செய்முறை :
* கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
* பூண்டை ஒன்றும் பாதியாக நசுக்கி கொள்ளவும்.
* வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி (தனியா), சீரகம், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சத்தான கொள்ளு மிளகு ரசம் ரெடி.
* இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரசத்தை அடிக்க வைத்து குடிக்கலாம்
++++++++++++++++++++++++++++++++++++
லெமன் பார்லி ஜூஸ்
தேவையானவை
எலுமிச்சை சாறு – 1 கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
பார்லி பவுடர் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சை எசன்ஸ் – 2 துளி
செய்முறை
எலுமிச்சை சாறுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மூடி வைக்கவும். பார்லி பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும். மீதமுள்ள சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைய வேண்டும். பிறகு இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். பிறகு வடிகட்டி, இதில் மீதமுள்ள எலுமிச்சை சாறு, எசன்ஸ் சேர்த்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இது நீண்ட நாட்கள் கெடாது. தேவைப்படும்போது ஒரு பங்கு ஜூஸுக்கு 3 பங்கு நீர் கலந்து பருகவும்.
+++++++++++++++++++++++++++++

No comments:
Post a Comment