செட்டிநாடு பூண்டு குழம்பு சைவம்
தேவையான பொருட்கள்
பூண்டு – 20 -30 பல்சின்ன வெங்காயம் – 20தக்காளி – 1மல்லித்தூள் – 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டிபுளி – நெல்லிக்காய் அளவுநல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டிதாளிக்ககடுகு – 1 தேக்கரண்டிசோம்பு – 1 தேக்கரண்டிவெந்தயம் – 1 /2 தேக்கரண்டிகருவேப்பிலை – சிறிதுசெய்முறை* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.* இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.* வெங்காயம், பூண்டு ஆகியவற்றைநீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.* பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.* தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.* பின் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும் அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.* பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.
++++++++++++++++++++++++++++++++
செட்டிநாடு கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – ஒரு கிலோ
சோம்பு – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 3
நாட்டுத் தக்காளி – 4
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நான்காக பிளவுபட்ட கத்தரிக்காய் போட்டு மூடிவிட வேண்டும். கத்தரிக்காய் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.
சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் குழம்பு ரெடி
+++++++++++++++++++++++++++++
செட்டிநாடு வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப்பூண்டு – 100 கிராம்
சுண்டை வத்தல் – 10
தக்காளி – 2
புளி – எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
சீரகம்
– 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டவும்.
No comments:
Post a Comment