நவரத்தினக்குருமா :
நவரத்தினமாய், வண்ணமயமான காய்கறிகளுடன் பக்குவமாய் மசாலாக்களை சேர்த்து சுவையோடு, மனமும் கலந்து, பார்த்தவுடன் சாப்பிடத்தோன்றும் அருமையான நவரத்தின குருமா. இதற்கு இணையாக சப்பாத்தி, பூரி, பரோட்டா மற்றும் இடியப்பம் பரிமாறலாம்.
நவரத்தினக்குருமா / Navarathina kuruma
தேவையான பொருட்கள்: 4 to 6 servings
கேரட் -1/2 கோப்பை
காலிபிளவர் (பூக்கோசு)-1 கோப்பை
பீன்ஸ் -1/2 கோப்பை
உருளைக்கிழங்கு-1
தக்காளி -1
வெங்காயம்-1
பச்சை பட்டாணி-1/2 கோப்பை
மக்காச்சோளம் -1/2 கோப்பை
தயிர்-1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
உப்பு-1 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்-1/2
அரைக்க:
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
தேங்காய் -1 மூடி
பொட்டுக்கடலை -2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு-4
பச்சை மிளகாய்-5
தாளிக்க:
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
பட்டை,
லவங்கம்,
கிராம்பு
செய்முறை :
1.காரட், பீன்ஸ், காலிபிளவர்,உருளைக்கிழங்கு, இவற்றை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.
2.தக்காளி மாற்று வெங்காயம், வெட்டி வைத்துக்கொள்ளவும்.
3.அரைக்கும் பொருட்களை நல்ல விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
5. இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும், வெட்டிய வெங்காயம் மாற்று காய் கறிகள் சேர்த்து 2 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
6.பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
7.சிறிது நேரம் வதங்கிய பின்னர் பச்சை பட்டாணி, மக்காச்சோளம் சேர்த்து, தண்ணீர் இரண்டு கோப்பை சேர்த்து நன்கு வேக விடவும்.
8. காய் வெந்ததும், தயிர், அரைத்த விழுது சேர்த்து மிதமானத்தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. மசாலா வாடை மாறியதும் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
10. சப்பாத்தி, பூரி, பரோட்டா இவைகளுக்கு ஏற்ற பதார்த்தம் நரத்தின குருமா.
+++++++++++++++++++++++++++++++++
ருசியான தக்காளி குருமா
தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க :
தேங்காய் – 2 பத்தை
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10
தாளிக்க :
கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்
செய்முறை :
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.
* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான தக்காளி குருமா ரெடி.
* இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
கோவை புகழ் அண்ணபூர்னா வெஜிடபிள் குருமா
இந்த குருமா சப்பாத்தி, பரோட்டா, பூரி , கீ ரைஸ் போன்ற உணவு வகைகளுக்கு ஏற்ற பக்க உணவாகும் ( சைட்டிஷ் ).
இதன் சுவையை நான் சொல்வதை விட கோவை மக்களை கேட்டு பாருங்களேன்! !!
தேவையான பொருட்கள் :
காய்கறிகள் 1 1/4 கப் ( பொடியாக நறுக்கிய காலிபிளவர், பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு, பச்சை பட்டாணி )
பிரியாணி இலை 1
கல்பாசி 1
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 பெரியது ( பொடியாக நறுக்கியது )
புதினா இலைகள் 1 கைப்பிடி
தயிர் 1 மேஜைக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி 3 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
வேர்கடலை எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
மசாலா அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சை மிளகாய் 4
சோம்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 3
முந்திரி பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
ஏலக்காய் 1
செய்முறை
1. காய்கறிகள் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
2. பிரஷர் குக்கரை அடுப்புல வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு , பிரிஞ்சி இலை, கல்பாசி , சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசியுமாறு வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் கிளறவும். அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கஸ்தூரி மேத்தி யையும் தயிரையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பிரஷர் குக்கரின் மூடிவைத்து வெயிட்டை போட்டு 2 விசில் சிம்மில் வைத்து விட வேண்டும்.

ஈசி பட்டாணி குருமா
இந்த குருமா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை வகைகளுக்கு நல்ல சைட்டிஷ்சா செய்து கொள்ளாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி 2 கப்
மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது )
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 4
சோம்பு 1 மேஜைக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 15
கொத்தமல்லி பொடி 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
பட்டை 1 இன்ச்
கிராம்பு 2
செய்முறை
1. வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணை போட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோம்பு மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும்.
2. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வரமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு பொடி வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
3. பிறகு வடசட்டியில் வதக்கிய கலவையை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
4. இப்பொழுது அரை வேக்காடு வேக வைத்து பட்டாணியை எடுத்து புதிய வடச்சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பட்டாணி நன்றாக வெந்து உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் காரத்தையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. குருமாவின் பச்சை வாசனை போய் நறுமணம் வீச தொடங்கும். குழம்பின் கெட்டி தன்மை நமக்கு ஏற்றவாறு கவனித்து கொள்ள வேண்டும்.
மீல்மேக்கர
குருமா
தேவை?
மீல்மேக்கர - 1/2 கிலோ
வெங்காயம் - 2
(நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11
(நீரில் ஊற வைத்து,
பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் -
தேவையான அளவு
கொத்தமல்லி -
சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான
அளவு
முதலில் ஒரு கடாயை
அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக்
கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
மஞ்சள் தூள் மற்றும்
மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி
இறக்கி விட வேண்டும். பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
பிறகு மீல்மேக்கரை
நன்கு கழுவி, அதனை குக்கரில்
போட்டு, தண்ணீர் ஊற்றி,
உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும். இறுதியில் அகன்ற
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது
எண்ணெய் ஊற்றி, அரைத்து
வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால்,
மிளகு தூள் மற்றும் உப்பு
சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் குக்கரில் உள்ள மீல்மேக்கரை நீருடன்
வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க
விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று
கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மீல்மேக்கர
குருமா தயார்..
No comments:
Post a Comment