Friday, 29 July 2016

சட்னி



+++++++++++++++++++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி :-
========================
தேவையான பொருட்கள்:-
===========================

பெரிய கத்திரிக்காய் – 5

வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப)

உளுந்து – 2 தே. கரண்டி

புளி – சிறிதளவு

உப்பு தேவையான அளவு

சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)

கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க

எண்ணை – தாளிக்க

செய்முறை:-
==============

1) கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்.

2) மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்).

3) கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.

4) ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

5) மிக்ஸியில் வரமிளகாய், உளுந்து, புளி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

6) மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.

7) ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.

8)இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
++++++++++++++++++++++++++++++++++
கடலைப்பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்

தேங்காய் துண்டுகள் – 1 கையளவு

வர மிளகாய் – 3

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

:செய்முறை:
                   முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
++++++++++++++++++++++
கத்திரிக்காய் சட்னி:          
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்  – 2 பெரியது
சின்ன வெங்காயம்  – 15  அல்லது பெரிய வெங்காயம்  – 1
தக்காளி  – 1
வர மிளகாய்  – 4
புளி  – சிறிய  நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவியது  – 3  மேசைக்கரண்டி
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  – 1  தேக்கரண்டி
செய்முறை
கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
சூடு ஆறிய பின்பு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு
கத்திரிக்காய் சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment