++++++++++++++++++++++++++++++
கார்லிக் சிக்கன்(Fry):-
======================
தேவையான பொருட்கள்:-
===========================
கோழி – 1 கிலோ
பூண்டு – 30 பல்
அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி
சோள மாவு – 3 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் – 10
சின்ன வெங்காயம் – 4
தக்காளி – 1
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
============
1) கோழித்துண்டுகளை சிறியதாக வெட்டி சுத்தம் செய்யவும்.
2) மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைக்கவும்.
3) பிறகு சிறிய துண்டுகளாக்கிய கோழியை சோளமாவு, அரிசிமாவு, சோயாசாஸ், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு கலந்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
4) பூண்டை லேசாக தட்டி வைக்கவும்.
5) கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி தட்டிய பூண்டை போட்டு நன்றாக சிவப்பாகும் வரை பொறிக்கவும்.
6) அப்படியே அதே எண்ணெயில் கோழி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுக்கவும்.
7) அரைத்து வைத்திருக்கும் மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி ,உப்பு ஆகியவற்றை இதனுடன் போடவும்.
8)இந்த கலவையை எண்ணெயில் வதக்கி சோயாசாஸ் சேர்க்கவும். டிப்பிங் சாஸ் ரெடி.
9) பொறித்த பூண்டு, கோழி துண்டுகளை பரிமாறும் தட்டில் அலங்கரித்து வைத்து டிப்பிங் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++
மட்டன் சுக்கா:-
===============
தேவையான பொருட்கள்:-
=========================
மட்டன் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:-
---------------------
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:-
============
1) முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2) பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.
3) பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
4) பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
5) பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
6) மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மட்டன் சுக்கா ரெடி..
+++++++++++++++++++++++++++++++++
மீன் பிரியாணி
============
தேவையான பொருட்கள் : -
=====================
அரிசி - முக்கால் கிலோ
மீன் - முக்கால் கிலோ
வெங்காயம் பெரியது - 4
தக்காளி பெரியது - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
புதினா, மல்லித் தழை - தலா 5 கொத்து
எண்ணெய் - 100 மில்லி
தயிர் - அரை கப்
பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
முட்டை - ஒன்று
செய்முறை:-
===========
1) மீனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், முட்டை, உப்பு சேர்த்து முறுகாமல் அரைபாகம் வேகுமளவு பொரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்து வைக்கவும்.
2) அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடிகட்டி அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.
3) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4) வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, அவற்றோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
5) நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
6) கொதித்த பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு மீனை தனியாக எடுத்து விடவும்.
7) வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறி விட்டு சாதத்தின் மேல் மீன் துண்டுகளை வைத்து மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.
8)சுவையான மீன் பிரியாணி ரெடி. விரும்பினால் முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடலாம்..
+++++++++++++++++++++++++++++++++++
தலப்பாகட்டு பிரியாணி செய்யும் முறை:-
================================
தேவையான பொருட்கள்:-
===================
சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தனி தனியாக அரைத்து கொள்ள:-
-----------------------------------------------
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
புதினா + கொத்தமல்லி - 1 கப் சுத்தம் செய்த இலைகள்
இஞ்சி பூண்டு விழுது : (சுமார் 3 மேஜை கரண்டி)
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க:-
----------------------------------------------
அரைத்த இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
தனியா தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
முதலில் தாளிக்க:-
-------------------------
எண்ணெய் + நெய் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலை
பச்சை மிளகாய் - 4
செய்முறை:-
----------------
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.
சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.
வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
புதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.
பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. )
சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.
(கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.)
2 - 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 - 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.)
சுவையான பிரியாணி ரெடி.
கவனிக்க:-
-------------
அனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும்.
கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும்.
சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும்.
அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்...
+++++++++++++++++++++++++++++
சிக்கன் குருமா செய்வது எப்படி..!!
பேச்சுலர்களே! நீங்கள் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிக்கன் குருமா செய்து சுவைத்ததுண்டா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சிக்கன் குருமாவை கொடுத்துள்ளது. அந்த சிக்கன் குருமாவின் செய்முறையைப் படித்து, தவறாமல் செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/4 கப் பச்சை மிளகாய் - 1 சோம்பு - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் முந்திரி - 3 தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 ஏலக்காய் - 1 கற்வேப்பிலை - சிறிது பூண்டு - 6 பற்கள்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5-7 நிமிடம் வதப்பி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி!!!
++++++++++++++++++++++++++++++
சிக்கன் சால்னா செய்வோமா..??
பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு தான் சிக்கன். இந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.
அதில் ஒன்று தான் சிக்கன் சால்னா. சால்னா என்பது வேறு ஒன்றும் இல்லை, குழம்பைத் தான் அப்படி சொல்வார்கள். இங்கு மிகவும் ருசியாக இருக்கும் சிக்கன் சால்னாவை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது வறுத்து அரைப்பதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 தேங்காய் - 1 கப் (துருவியது) கசகசா - 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி
++++++++++++++++++++++++++++++++++
கர்நாடகா சிக்கன் ட்ரை ஃப்ரை.!!!
.
சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை.
இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கனை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறினால், காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெடி!!!
++++++++++++++++++++++++++++++++
முட்டை பிரட் மசாலா இறைய ஸ்பெஷல்
முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம்.
முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் - 8 துண்டுகள் முட்டை - 4 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து, தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பச்சை வாசனை போனதும், வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும். இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!!
+++++++++++++++++++++++++++++++
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 குழிக் கரண்டி
செய்முறை *
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும், வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும்.
தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.
++++++++++++++++++++++++++++++++
வெஜிடபுள் ஆம்லேட் செய்வது எப்படி..!!
தேவையானவை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை - தலா 50 கிராம், பச்சைமிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள்,
மிளகுத் தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
பலன்கள்:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது.
பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
+++++++++++++++++++++++
புதினா ஆம்லேட்..!!
தேவையான பொருட்கள்:
முட்டை- 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
புதினா - தேவையான அளவு
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
* தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள்.
* ஆம்லேட்டை சுற்றி எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.
* சுவையான வித்தியாசமான புதினா புதினா ஆம்லேட் ரெடி.
+++++++++++++++++++++++++++++++++
சுவையான முட்டை குருமா செய்வது எப்படி...!!
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1
தக்காளி – 2
முட்டை – 4
பச்சைமிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
கொத்துமல்லி இலை – சிறிது
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு
அரைக்க :
தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 4
சோம்பு – 1டீஸ்பூன்
செய்முறை:
* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
* அடுத்து அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும்வரை கிளறவும்.
* அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டைகுருமா ரெடி!
+++++++++++++++++++++++++
மக்ரூன்
தேவையான பொருட்கள்
முட்டையின் வெள்ளை கரு - 3
சீனி - 100 கிராம் (திரித்து சல்லடையில் அரித்து வைக்கவும்)
முந்திரி - 100 கிராம் (திரித்தது)
செய்முறை:
1. முட்டையை பீட்டரில் ஸ்லோவில் வைத்து அடிக்கவும்.
2. சிறிது நுரை வந்தப் பின்பே சீனியை ஒரு ஸ்பூன் போட்டு பீட்டரின் வேகத்தை குறைத்து வைத்து அடிக்கவும். பின்பு அதிக ஸ்பீடில் வைத்து அடிக்க வேண்டும் .
(ஒவ்வொரு ஸ்பூனாக சீனியினை சேர்த்து அடிக்கவும்)
3. 10 - 12 நிமிடங்கள் மட்டுமே அடிக்க வேண்டும் கூடுதலாக ஒரு நொடி கூட அடிக்கக் கூடாது.
4. நன்றாக க்ரீம் பதம் வந்ததும் பீட்டரை நிருத்தி முந்திரியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவினை ஸ்பூனால் சேர்க்கவும் (மிகவும் மென்மையாக மாவுக்கும் கைக்கும் வழிக்காமல் சேர்க்கவும்)
5. அவனை 150°C 10நிமிடம் முற்சூடு படுத்தவும் .
6. பின் ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து தயாராக வைக்கவும்.
7. பட்டர் பேப்பரில் சுருல் பிடித்து , மாவினை உள்ளே வைத்து மூடி, கீழ் நுனியை கட் செய்து, கூம்பு வடிவத்தில் , தயாராக வைத்த ட்ரேயில் பிழியவும்.
8. பின் அவனில் வைத்து 120°C ல் 2மணி நேரம் பேக் பன்னவும்.
9. நேரம் முடிந்து நன்கு ஆறிய பின்பே எடுக்க வேண்டும்.
சுவையான கலக்கலான தூத்துக்குடி ஸ்பெசல் மக்ரூன் தயார்.
டிப்ஸ்:
1. ஒரு துளி மஞ்சள் கரு கூட விலக் கூடாது.
2. கையில் gloves மாட்டிக் கொண்டு வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் கையில் உள்ள சூட்டினால் பதம் சரியாக வராது. கையில் வெள்ளை கரு படாமல் பார்த்து கொள்ளவும்.
3. பாத்திரத்தில் ஒரு துளி தண்ணீர் கூட இருக்க கூடாது.
+++++++++++++++++++++++++++++
மீன்குழம்பு
தேவையானவை:
மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
தக்காளி - 1 மீடியம் சைஸ்T
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி பொடி - 2 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் – 1 கீறியது
உப்பு தேவையான அளவு
எண்ணைய் – 1 ½ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மீனை கழுவி தேவையான அளவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லி பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கலக்கி மீனை அதிலிட்டு இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும்
ஒரு வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும். மீதியுள்ள வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிதாக அரிந்து கொள்ளவும்.
தேங்காய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கொஞ்சம் பெரிதாக அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து நைசாக இல்லாமல் கொறகொறப்பாக அரைக்கவும்.
ஒரு கடாய் அல்லது மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி மெலிதாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கி, மீதமுள்ள மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகளை சேர்த்து புளித்தண்ணியை ஊற்றி நன்றாக கலக்கவும்.
வாணலி/மண்சட்டியை அடுப்பில் வைத்து மூடியிட்டு கொதிக்க வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து மீனை ஒவ்வொன்றாக சேர்த்து மூடியிட்டு மீன் பாதியளவு வேகவைக்கவும்.
இப்பொழுது தக்காளி சேர்த்து வேகவிடவும்.
மேலாக எண்ணெய் ஊற்றி மீன் வேகும் வரை காத்திருக்கவும்.
மூடியை திறந்து சிறிய தீயில் எண்ணெய் மேலே மிதந்து வரும்வரை குழம்பு பாதி திக்காக வரும் வேக வைக்கவும்.
இறுதியில் மல்லி இழை இட்டு பறிமாறவும்.
இந்த மீன்குழம்பு சோற்றிற்க்கும், தோசைக்கும் ஏற்றது.
[04:31, 25/6/2016] +91 99407 72384: மிளகு கோழி தொடை வறுவல்
இது வெங்காய சாம்பார், ரசம், தயிர் சாதம் உடன் சாப்பிட ஏற்ற உணவாகும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் லெக்பீஸ் 6
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
பூண்டு 8 பற்கள்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
புளி கரைசல் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
சிக்கன் மசாலா
கொத்தமல்லி விதை 4 தேக்கரண்டி
மிளகு 15
வரமிளகாய் 3
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 1/2 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 5
பூண்டு 4 பற்கள்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. வடச்சட்டியில் சிக்கன் மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து ஆற வைக்கவும். பிறகு மஞ்சள்தூளை சேர்க்கவும்.
2. இப்பொழுது மசாலா பொருட்களை மிக்ஸியில் இட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
3. சிக்கனை கழுவி கத்தியால் சிக்கனை கீறி கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி பொடியை சேர்த்து நன்றாக பிசிறி 1 மணிநேரம் ஊறவைக்கவும் .
5. இப்பொழுது வடச்சட்டியில் 1 1/2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளாக சிக்கனை வேகவைக்கவும் .ஒவ்வொரு துண்டுகளையும் 8-10 நிமிடம் வேக விடவும்.
6. அனைத்து துண்டுகளை வேகவைத்த பின்னர், ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து கொள்ளவும்.
7. வறுத்த சிக்கனை வடச்சட்டியில் சேர்த்து பின்னர் மிளகாய் தூளை சேர்க்கவும் , பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் மீதமுள்ள அரைத்த சிக்கன் மசாலாவை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வேக வைக்கவும்.
8. இப்பொழுது புளி கரைசலை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக மசாலா, கோழி லெக்பீஸ்ல் படுமாறு நன்றாக கிளறி ட்ரையாக ஆகும் வரை நன்றாக தண்ணீரை சுண்ட வைத்து வெண்ணை (அ) நெய்யை 1 மேஜைக்கரண்டி சேர்த்து நன்றாக சுருள வறுத்து எடுக்கவும்.
[04:33, 25/6/2016] +91 99407 72384: All in one 👇
[04:33, 25/6/2016] +91 99407 72384: முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்னு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை,உப்பு- கொஞ்சம்
செய்முறை
தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.தேவையானதை எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)
மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி.
கோழி குழம்பு
தேவையான பொருட்கள்
கோழி- 1 கிலோ
பட்டை-1
ஏலக்காய்-3
லவங்கம்-2
பச்சை மிளகாய்-2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தேங்காய்- கால் மூடி
கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்
செய்முறை
தேங்காயை நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து அரைத்து (தேங்காயுன் தூள் நன்கு ஒட்டுவதற்காக) பின் நீரில் கரைத்துக்கொள்ளவும்
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்
பின் பச்சை மிளகாய், புதினா,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்
வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்கு உப்பும் சேர்க்கவும்
நன்கு கொதி வந்த பிறகு கோழியை சேர்க்கவும்.
வெந்ததும் பரிமாறலாம்.
வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
தக்காளி - 4
வெங்காயம் - 2
தேங்காய் - 3 - 4துண்டு
சாம்பார்ப்பொடி அல்லது வற்றல்குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளிகரைசல் - 1/2 கப்
மல்லித்தழை - சிறிது
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்
வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, பெருங்காயம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து வாணலியை மூடி விடவும். அவ்வப்பொழுது கிளறி விடவும்.
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி அல்லது வற்றல் குழம்பு பொடி, உப்பு சேர்க்கவும்.
புளிகரைச்சல் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
கலந்து விட்டு கொதி வந்ததும் சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்ததும் வற்றலை பொறித்து சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த வற்றல் குழம்பு நீர்க்க இருக்காது, கெட்டியாக இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்
கிராமத்து கறி குழம்பு
தேவையான பொருட்கள்
1. ஆட்டுகறி - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
செய்முறை
கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சீலா மீன் துண்டுகள் - 8
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
புளி - சிறிதளவு
வத்தல்தூள் - 1 மேசைக்கரண்டி
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பெரிய பற்கள்
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
நச்சீரகம் - சிறிதளவு
வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, சிறிதளவு வெங்காயம் முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும்.
தக்காளி, தேங்காய்ப்பூ, புளி, வற்றல் தூள், மசாலா தூள் முதலியவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து தனியே வைக்கவும்.
சிறிதளவு தக்காளியை நறுக்கி தனியே வைக்கவும் .
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, நச்சீரகம், விதை நீக்கிய வற்றல் , வெந்தயம், சிறிதளவு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் அரைத்து வைத்த இஞ்சி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது மீனை தாளிப்பில் போட்டு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்து மூடி போட்டு அரைத்த மசாலா வாடை மீனில் சேரும்வரை 3 நிமிடங்கள் வேக விடவும்.
மீதி இருக்கும் வெங்காயத்தையும், சிறிதளவு தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த தக்காளி விழுதை மீனில் சேர்த்து புளி வாசனை போகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மீனுடன் மசாலா அனைத்தும் நன்றாக சேர்ந்து வெந்து மணம் வந்ததும் இறக்கி விடவும்.
மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்
மட்டன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
பூண்டு -- 10 பல் (நசுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
சாம்பார் பொடி -- 2ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 10 என்னம்
தாளிக்க:
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
அன்னாசிப்பூ -- 1 என்னம்
செய்முறை
குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.
பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வைக்கவும்.
குழம்பு ரெடி. இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர். மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்
நண்டு குழம்பு
தேவையான பொருட்கள்
நண்டு -- 1 கிலோ
சாம்பார் பொடி -- 1 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
அரைக்க -- 1:
சோம்பு -- 1 ஸ்பூன்
பூண்டு -- 10 பல்
அரைக்க -- 2 :
தேங்காய் -- 1 மூடி (தனியாக நைசாக அரைக்கவும்)
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைக்க - 1 யை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
ரெடி.
[04:37, 25/6/2016] +91 80979 96321: Wow many ideas for Tom..
[04:38, 25/6/2016] +91 99407 72384: மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 15
தயிர் - அரை கப்
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
1.மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2.பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை லேசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
3.பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
4.பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பில்லாத வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றுடையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
6.பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
7.வெங்காயக் கலவை 2 நிமிடங்கள் வதங்கியதும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்து மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
8.5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
9.தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
10.தேங்காயுடன் இஞ்சி, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
11.இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் , முந்திரியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்காகத்தான்.
12.தேங்காய் பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித் தழை சேர்க்கவும்.
13.ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
[04:39, 25/6/2016] +91 99407 72384: சங்ககாலத்து ஊன் சோறு
எனது நண்பர்களே சொல்லி விட்டார்கள் இதன் சுவை பிரமாதம் என்று.
இந்த ஊன் சோறு தான் பிரியாணிகளின் தாய், இந்த ஊன் சோற்றின் பரிணாம வளர்ச்சி தான் பிரியாணியும், புலாவும்.
சங்க காலத்தில் அரேபிய வணிகர்கள் நமது திராவிட நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த போது இங்கு இருந்து சென்றது தான் பிரியாணி.
அரேபியர்களின் பிரதான உணவு ரொட்டி, சப்பாத்தி ஆகும். அப்படி இருக்கையில் எங்கு இருந்து வந்தது அரிசி உணவின் பழக்க வழக்கம். இதுவும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றே ஆகும்.
இந்த ஊன் சோறு ஊத்துக்குளி பிரியாணியை, கொங்கு பிரியாணியை, திண்டுக்கல் பிரியாணியை ஒத்து உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
இந்த ஊன் சோற்றின் வரலாறு புறநானூறு, அகநானூறு ல் கூறப்பட்டுள்ளது. லெமுரியா கண்டனம் இருந்த காலத்திலேயே இந்த ஊன் சோறு கலாச்சாரம் இருந்து உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.
இப்பொழுது சொல்லுங்கள் பிரியாணியின் ( ஊன் சோறு ) தாயகம் எது என்று? ?
தேவையான பொருட்கள்
சிக்கன் 250 கிராம்
சீரக சம்பா அரிசி 200 கிராம்
தேங்காய் பால் 250 மில்லி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
இலவங்கம் 2
புளித்த பசுந்தயிர் 1/4 கப்
பிரியாணி இலை 1
பட்டை 1 இன்ச்
ஏலக்காய் 2
பசு நெய் 1/2 கப்
அரைக்க தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 1 கப்
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
புதினா இலைகள் 1/2 கப்
மிளகு 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 5
சோம்பு 1 1 /2 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 3
பூண்டு பற்கள் 8
ஏலக்காய் 3
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. பிரஷர் குக்கரில் சுத்தமான பசு நெய்யை ஊற்றவும் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு நன்றாக வதக்கவும்.
2. சிக்கனையும் , இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும் .
3. இப்பொழுது கால் கப் புளித்த பசுந் தயிர்ரை ஊற்றி மஞ்சள் தூளையும் போற்று நன்கு வதக்கவும்.
4. இப்பொழுது அரைக்க தேவையான பொருள்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து நன்கு விழுதாக மாற்றவும்.
5. பிறகென்ன கழுவிய சீரக சம்பா அரிசியை பிரஷர் குக்கரில் சேர்க்கவும்.
6. இச்சமயத்துல தேங்காய் பாலை ஊற்றவும் , அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும் இதனுடன் கொத்தமல்லி தூளையும் தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
7. இப்பொழுது குக்கரின் மூடிவைத்து மூன்று விசில்கள் விடவும். மூடியை திறந்த பின்னர் பசு நெய்யை குக்கரில் உள்ள ஊன் சோற்றின் மேல் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு :
1. மட்டன் ஊன் சோறு செய்வதாக இருந்தால் மட்டனை தனியாக பிரஷர் குக்கரில் சேர்த்து, தேங்காய்பால் 100 மில்லி , சிறிது தண்ணீர், உப்பு, மிளகு 5 , பச்சை மிளகாய் 3 மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
2. நாட்டுகோழியாக இருந்தாலும்கூட குறிப்பு 1 தான் ஃபாலோ செய்ய வேண்டும்.
3. பிரஷர் குக்கரில் தேங்காய் பாலே போதுமானது அரிசியும் கறியும் வேக வைப்பதற்கு தேவைக்கேற்ப தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
[04:48, 25/6/2016] +91 99407 72384: தொண்டாமுத்தூர் முதலியார் மட்டன் சுக்கா வறுவல்
தேவையான பொருட்கள்
மட்டன் – 350 கிராம்
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 2 அல்லது சின்ன வெங்காயம் – 30
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மசாலாதூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
பூண்டு(பொடியாக நறுக்கியது) – 5 பல்
அரைக்க
தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 5
சோம்பு – 1 தேக்கரண்டி
தாளிக்க
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை
1.மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 1 மேசைக்கரண்டி வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
4.மல்லித்தூள், 1 தேக்கரண்டி மசாலாதூள், பாதி உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மட்டன் சரியாக இல்லையென்றால் 1 /2 கப் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி வேக விடவும்.
5.குக்கரில் இருந்து ஆவி வரும்போது, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
6.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
7.கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.
8.பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
9.பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும்.
10.மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு திக்ககும் வரை வதக்க வேண்டும்.
11.கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
[04:50, 25/6/2016] +91 99407 72384: ஜிஞ்சர் சிக்கன் மசாலா
தேவையான பொருள்கள்:
சதைப்பிடிப்பான கோழிக் கால்கள் - 2
பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - 2 கிராம் (தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
இஞ்சி - 5 கிராம் (தோல் நீக்கி நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 5 கிராம் (நறுக்கவும்)
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
செய்முறை:
1.அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும்.
2.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.
3.இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.கோழிக்கறியை இதனுடன் சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவைச் சேர்த்து 400 மில்லி தண்ணீர் விட்டு குறைந்த தீயில் கோழிக்கறி வெந்து, மசாலா எல்லாம் ஒட்டி கொள்ளும்போது அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.
காரசாரமான நண்டு குழம்பு
தேவையான பொருட்கள் :
கடல் நண்டு 3 ( சுத்தம் செய்தது 10 துண்டுகள் )
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக அரிந்தது )
தக்காளி 3 பெரியது ( பொடியாக அரிந்தது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 4
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
மசாலா அரைக்க
தேங்காய் துருவல் 1/2 கப்
கசகசா 1 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
செய்முறை
1. நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
2. மிக்சியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அந்த கலவையில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் அதை நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
5. இப்பொழுது அந்த கலவையில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம்மசாலா தூளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து 30 நிமிடம் வரை வதக்கவும் .
6. அதில் சுத்தம் செய்யப்பட்ட நண்டு துண்டங்களை சேர்த்து மசாலா கலவையில் சேர்த்து ஒன்றாக கலக்கி வதக்கவும்.
7. மிக்சியில் தேங்காய் துருவல் , கசகசா, மிளகு மற்றும் சோம்பை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
8. அரைத்த இந்த கலவையை நண்டு மசாலாவில் சேர்க்கவும்.
9. நன்றாக கலக்கி மூடி போற்று மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும் அதன் பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவவும் .
10. வெந்ததும் இறக்கி விட்டு சாதத்துடன் பரிமாறவும்.