பூண்டுக் கஞ்சி
தேவையானவை:
அரிசி - ஒரு கப்
பூண்டு - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பசும்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை தண்ணீரில் அலசி, அதனுடன் உரித்த பூண்டு, சீரகம் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் குழைய வேகவிடவும். அரிசி குழைய வெந்ததும் மூடியைத் திறந்து பால் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை கஞ்சி பதத்துக்கு வந்தவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால், அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.
குறிப்பு:
உணவு சரியாக செரிமானம் ஆகாததினால் ஏற்படக்கூடிய வாய்வு பிரச்னைகளை எல்லாம் சரிப்படுத்தி, உணவு செரிமானத்தைச் சீராக்கும் கஞ்சி இது
++++++++++++++++++++++++++++++++++
பாசிப்பயறு-கருப்பட்டிக் கஞ்சி
தேவையானவை:
பாசிப்பயறு - அரை கப்
கருப்பட்டி - 300 கிராம்
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 3
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாசிப்பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டு காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.
4 நிமிடம் மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்கவிடவும். பிறகு மீதம் இருக்கும் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.
+++++++++++++++++++++++++++++++++
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
தேவையானவை:
நறுக்கிய பெரிய பீன்ஸ் / அவரைக்காய் - ஒரு கப்
நறுக்கிய கேரட் - ஒரு கப்
நறுக்கிய ஃபிரெஞ்ச் பீன்ஸ் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - 3
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு
பூண்டு - 5 பல்
நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில், குக்கரை வைத்து காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, தக்காளி உட்பட தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். கூடவே காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாக தண்ணீர் ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து பிரஷர் வெளியே வரும்போது வெயிட்டை போடவும். பிறகு அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.
அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும். காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:
சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டுக் கஞ்சி
தேவையானவை:
அரிசி - ஒரு கப்
பூண்டு - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பசும்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை தண்ணீரில் அலசி, அதனுடன் உரித்த பூண்டு, சீரகம் மற்றும் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் குழைய வேகவிடவும். அரிசி குழைய வெந்ததும் மூடியைத் திறந்து பால் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை கஞ்சி பதத்துக்கு வந்தவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால், அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.
குறிப்பு:
உணவு சரியாக செரிமானம் ஆகாததினால் ஏற்படக்கூடிய வாய்வு பிரச்னைகளை எல்லாம் சரிப்படுத்தி, உணவு செரிமானத்தைச் சீராக்கும் கஞ்சி இது
+++++++++++++++++++++++++++++
உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப். .
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
• வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
• வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.
ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
---------------------------------------------------------------------------------------------------
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
காய்கறி சூப்
தேவையானவை: பீன்ஸ் - 10, கேரட் - ஒன்று, கோஸ் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பால் - ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
பாதாம் சூப்
தேவையானவை: பாதாம் - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி, பாஸில் இலை - சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர், பால் - ஒரு கப், பாதாம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
காளான் கிரீம் சூப்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு - 2 பல், பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் - 100 மில்லி, வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.வொயிட் சாஸ் செய்வதற்கு: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மைதா - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை லிட்டர், உப்பு - சிறிதளவு.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்... வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
தேவையானவை: மூங்கில் ரைஸ் ('காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப், கேரட் - ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி - ஒரு கப், பீன்ஸ் - 5 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
பானிபூரி சூப்
தேவையானவை: சிறு பூரி - 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 2 கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - 2 டீஸ்பூன், பூண்டு - ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
மின்ஸ்டோன் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம் - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் - சிறிதளவு, டர்னிப் - ஒன்று, தக்காளி - 3, பூண்டு - 2 பல், ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா - ஒரு கப் (வேக வைத்தது), உப்பு - தேவையான அளவு.
மிளகு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ஹாட் அண்ட் சோர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, வினிகர் - கால் கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, அஜினமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
ஆஸ்பரகஸ் சூப்
தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை டின், கிரீம் - ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
உருளைக்கிழங்கு சூப்
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
ஆவகாடோ கார்ன் சூப்
தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
தக்காளி சூப்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு
தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.
மேன்சௌ சூப்
தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், பேபி கார்ன் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துகேற்ப, அஜினமோட்டோ - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் - காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க... வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து... தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புரூக்கோலி கிரீம் சூப்
தேவையானவை: புரூக்கோலி - ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெண்ணெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை - சிறிதளவு, கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,
பப்பாளி இஞ்சி சூப்
தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.
க்ளியர் சூப்
தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, முட்டை - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
திடீர் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 50 கிராம், நறுக்கிய பூண்டு - இஞ்சி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி - ஒன்று, புரூக்கோலி - சிறிதளவு, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை - தேவையான அளவு.
முளைகட்டிய நவதானிய சூப்
தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில் எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், புளிக்காத கெட்டி தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
பருப்பு சூப்
தேவையானவை: வேக வைத்த பருப்பு - ஒரு கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்), பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.
பட்டாணி சூப்
தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் - தேவையான அளவு.
சிம்பிள் சூப்
தேவையானவை: காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை: காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், கோஸ் - 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.டோஃபு பாலக் சூப்
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, கோஸ் - 100 கிராம், நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
பூண்டு சூப்
தேவையானவை: முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் - அரை லிட்டர், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல், வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பீட்ரூட் சூப்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் , கேரட் துருவல் - அரை கப் , வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.+++++++++++++++++++++++++++++++
மிளகு சூப்..!!!
தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை சூப்..!!!
தேவையானவை:
எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
++++++++++++++++++++++++++++++
வெண்டைக்காய் சூப்...!!!
தேவையானவை:
வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
+++++++++++++++++++++++++++++++++
கிரீமி மஷ்ரூம் சூப் / காளான் சூப்.
தேவையான பொருட்கள்
காளான் – 10
பெரிய வெங்காயம் – 1
சீஸ் துருவல் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
பால் – 1 கப்
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – விருபத்திற்கேற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை
காளான்களை நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு முதலியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணையை உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கி, வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், காளான் சேர்த்து வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து , மிக்சியில் அரைத்து வாடி கட்டிக் கொள்ளவும்.
வடிகட்டியதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது பாலில் கார்ன்ப்ளார் கரைத்து சேர்க்கவும்.
இது நன்கு கொதிக்கும் போது இறக்கி, சீஸ் துருவல், மிளகுத்தூள் சேர்க்கவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் இரண்டு காளான்களை மெல்லியதாக நறுக்கி, அரை தேக்கரண்டி வெண்ணையில் வதக்கி சூப்பில் மிதக்க விடலாம்.
No comments:
Post a Comment