Wednesday, 1 June 2016

வடை

பீட்ரூட் வடைBeetroot Vada

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
பீட்ரூட் கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
கடலை பருப்பு அரை கிலோ
சோம்பு 1 டீஸ்பு+ன்
பட்டை2
இலவங்கம்4
காய்ந்த மிளகாய் 6
கொத்தமல்லி தழை1 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

  கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து தண்ணீர் அதிகம் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ளவும்.

  துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

  பிசைந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்டவும்.

  எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது மாலை வேலையில் சிற்றுணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட் - 4 
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) 
துவரம் பருப்பு - 200 கிராம் 
வரமிளகாய் - 6 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் துவரம் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு பீட்ரூட்டை துருவிக் கொண்டு, அதனை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல், வதக்க வேண்டும். பின்பு அத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, அதோடு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதை வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் வடை ரெடி!

No comments:

Post a Comment