புதினா துவையல்
தேவையானவை
புதினா = ஒரு கட்டு
வெள்ளரி - ஒன்று
பச்சை மிளகாய் = இரண்டு
எலுமிச்சை சாறு = ஒரு மேசைகரண்டி
வெங்காயம் = ஒன்று சிறியது
உப்பு = தேவைக்கு
செய்முறை
புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும். வெள்ளரியை தோலெடுத்து பொடியாக நறுக்கவும். புதினா, வெள்ளரி, பச்சமிளகாய்,உப்பு சேர்த்து நன்கு முக்கால் பதத்திற்கு அரைத்து கடைசியாக வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்து அரைத்து வழித்தெடுக்கவும். காரம் தேவைபட்டால் கூட ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்
++++++++++++++++++++++++
பூண்டு துவையல் !!
தேவையானவை:
உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
+++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment