எண்ணெய் கத்திரக்காய் குழம்பு:
கத்தரிக்காய் -1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2,
தேங்காய் - அரை மூடி (சிறியது)
பூண்டு - 10 பல்,
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி,
புளி தண்ணீர் - 2 கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 ஆர்க்கு,
உப்பு - தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும். தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். எண்ணெய் கத்திரக்காய் குழம்பு ரெடி.
++++++++++++++++++++++++++++
சின்ன வெங்காயம் -100 கிராம்
தக்காளி -1
பூண்டு -50 கிராம்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
புளி-தேவையான அளவு
தாளிக்க...
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -அரை டீஸ்பூன்
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் உறிக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிய பின் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்னர் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான காரக்குழம்பு தயார்.
பூண்டு குழம்பு
சுண்டைக்காய் குழம்பு
சுண்டைக்காய்(வத்தல்) -100கிராம்
வாழைக்காய் -1
சின்னவெங்காயம் -100கிராம்
பச்சைமிளகாய் -1
பூண்டு -10பல்
புளி கரைசல் -1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப்
கடுகு -1/4 ஸ்பூன்
வெந்தயம் -1/4ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை வதக்கி வைத்துக்கொள்ளவும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி வதக்கி வைத்துள்ள வாழைக்காயை இதில் கலந்து கிளறவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து போதுமான அளவு உப்பு கலந்து கொள்ளவும். பின்னர் சுண்டைக்காய் வத்தல் கலந்து சுண்டைக்காயை 5 நிமிடங்கள் கொதிகவிட்டு தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கலந்து இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.
++++++++++++++++++++++++
பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு:!!!
தேவையான பொருட்கள்:
பூண்டு-5 பல்; கறிவேப்பிலை-1 கப்; வெந்தயம்-1 தேக்கரண்டி; கடுகு-1/2 தேக்கரண்டி; காய்ந்த மிள்காய்-4; சின்ன வெங்காயம்-1 கப்; தக்காளி-1; தனியா பொடி-1 மேஜைக் கரண்டி; எண்ணெய்-1 மேஜைக் கரண்டி; புளி-எலுமிச்சை அளவு; உப்பு-தேவையான அளவு;
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணையை வாணலியில் விட்டு, கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பின் புளியைக் கரைத்து விட்டு, அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும்போது, தனியாத் தூளை சேர்க்கவும்.
இது பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
No comments:
Post a Comment