Tuesday, 31 May 2016

வற்றல் - வடாம் - ஊறுகாய

வற்றல் - வடாம் - ஊறுகாய
வெயில் காலம் துவங்கிவிட்டாலே, மொட்டை மாடியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு... வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரிக்கத் துவங்கிவிடுவார்கள் இல்லத்தரசிகள் பலர். பொரியல் செய்யாத சமயத்தில் அவசரத்துக்குக் கைகொடுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களை 'இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையில் அசத்தும் 30 வகை வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரித்து வழங்கி, உங்களுக்கு ஆருயிர்த் தோழியாய் உதவிக்கரம் நீட்டுகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

சம்மர்ல தயார் பண்ணுங்க... வருஷம் முழுக்க டேஸ்ட் பண்ணுங்க!

கொத்தவரங்காய் வற்றல்

தேவையானவை: கொத்தவரங்காய் - அரை கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நல்ல கொத்த வரங்காய்களாக தேர்வு செய்து... அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும் (அதாவது உடைக்கும் பதம் வரும் வரை). பிறகு, எடுத்து பத்திரப்படுத்தவும

இதை எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். குழம்பிலும் சேர்க்கலாம்.

சுண்டைக்காய் வற்றல்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - அரை கிலோ, மோர் - ஒரு லிட்டர், காய்ந்த மிளகாய் - 3, உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை: பச்சை சுண்டைக்காயை அலசி கத்தியால் லேசாக கீறிக்கொண்டு, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வைத்து பிறகு நீரை வடிக்கவும். மோரில் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, சுண்டைக்காயை போட்டு ஊறவிடவும். அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காயவிடவும். மோரை கீழே ஊற்றி விடக்கூடாது. தனியே எடுத்து வைக்கவும். மாலையில் திரும்பவும் காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடிவைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே மாதிரி 3 நாட்கள் செய்ய வேண்டும். வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து, எடுத்து பத்திரப்படுத்தவும். வற்றல் குழம்பு செய்ய இதை வதக்கி பயன்படுத்தலாம். இந்த வற்றலை வறுத்து மிக்ஸியில் பொடித்து, சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

மோர் மிளகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் - 100 கிராம், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். காம்பு மிகப் பெரிதாக இருந்தால், சிறிய அளவு மட்டும் விட்டு விட்டு, மீதியை நீக்கிவிடவும். பெரிய கண்ணாடி பாத்திரம் / ஜாடியில் மிளகாயை சேர்க்கவும். தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி வைக்கவும்.

3 நாட்கள் ஊறிய பிறகு, தயிரிலிருந்து மிளகாயை சற்றே பிழிந்தாற்போல் எடுத்து, ட்ரே (அ) தட்டு (அ) பெரிய பாலித்தீன் கவரில் பரப்பி, நல்ல வெயிலில் காய வைக்கவும். தயிர் கலவையும் வெயிலேயே வைக்கலாம். மாலை ஆனவுடன் மிளகாயை திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி காய வைக்கவும். வெயிலில் வைக்க வைக்க... மிளகாயும், தயிரும் காய்ந்துவிடும். பிறகு, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் நன்றாக வறுக்க வேண்டும்).

 இது மோர் சாதத்துக்கு சரியான ஜோடி. மோர்க்களி செய்யும்போதும் பயன்படுத்தலாம்.

வெண்டைக்காய் வற்றல்

தேவையானவை: வெண்டைக்காய் - ஒரு கிலோ, தயிர் - ஒரு கப், உப்பு - தேவைகேற்ப.

செய்முறை: பிஞ்சு வெண்டைக்காய்களாக பார்த்து வாங்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைக்கவும். மாலையில் தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக்காய்களையும் போட்டுக் கலந்து 3, 4 நாட்கள் ஊறவைக்கவும். பின்னர் வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும்.

இதைப் பொரித்து சாப்பிடலாம், குழம்பு செய்யவும் பயன்படுத்தலாம்.

கத்திரிக்காய் வற்றல்

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, புளித் தண்ணீர் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் புளித் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து  கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும்.

இதை வதக்கி பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.

தும்மட்டிக்காய் வற்றல்

தேவையானவை: தும்மட்டிக்காய் - ஒரு கப் (கோவைக்காயை விட சிறிய அளவில் இருக்கும்), புளித்த தயிர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தும்மட்டிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைக்கவும். வெந்தயத்தை தயிரில் 6 - 7 மணி நேரம் ஊறவைத்து... இதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, தும்மட்டிக்காயும் சேர்த்துக் கலக்கவும். பிறகு, இதை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.

இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், சூப்பர் சுவையில் இருக்கும்.

மணத்தக்காளி வற்றல்

தேவையானவை: மணத்தக்காளி காய் - கால் கிலோ, தண்ணீர் - அரை லிட்டர், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளி காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்தவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும்.

மணத்தக்காளி வற்றலை வதக்கிப் பயன்படுத்தி குழம்பு வைத்தால், சுவையும், மணமும் அள்ளும். இதை நெய்யில் வதக்கி, மிக்ஸியில் பொடி செய்து சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த வற்றலை வாரம் ஓரிரு முறை சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. இது, கர்ப்பப்பையில் புண் வரா மல் தடுக்கும்.

மைதா - ஜவ்வரிசி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், மைதா - கால் கப், பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் ஒரு கப் நீர் விட்டு, ஜவ்வரிசியை சேர்த்து குழைய வேகவிடவும். அடுத்த நாள், மைதாவை நீரில் கரைத்து இதனுடன் கலந்துகொள்ளவும். பிறகு, பச்சை மிளகாய், உப்பு, பெருங் காயத்தூள் ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நீரைக் கொதிக்கவிட்டு, இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி... மஞ்சள்தூள், சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை நிறுத்தவும். பிறகு, கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும். மறுநாள், அடுத்த பக்கம் திருப்பி போட்டு,  காய்ந்ததும் எடுத்து வைத்து, தேவைப்படும் போது, எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.

ஜவ்வரிசி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி - 3 கப், புளித்த மோர் - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 15 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), இஞ்சிச் சாறு - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை நன்கு அலசி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து மிளகாய் விழுது, உப்பு, இஞ்சி சாற்றை ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கிளறவும். பெரிய அடிகனமான பாத்திரத்தில் 4 - 5 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

 

ஜவ்வரிசி நன்கு வெந்த பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, புளித்த மோர், நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.

நல்ல வெயிலில் சுத்தமான துணி அல்லது பெரிய பாலித்தீன்  கவரை பரப்பி, சிறு கரண்டியால் மாவினை எடுத்து சின்ன, சின்ன வட்டங்களாக ஊற்றி வைக்கவும். 3-4 நாட்கள் காயவைத்து எடுத்து, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.

தக்காளி வடாம்

தேவையானவை: தக்காளி - 5, ஜவ்வரிசி - ஒரு கப், இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை 7 மணி நேரம் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து,  ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை ஸ்பூனால் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். 3-4 நாட்கள் காயவேண்டும்.

கலர்ஃபுல்லான இந்த வடாமை தேவைப்படும்போது சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.

அவல் வடாம்

தேவையானவை: அவல் - கால் கிலோ, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 5 (விழுதாக அரைக்கவும்), ஓமம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெள்ளைப் பூசணி - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: அவலை நன்றாக மண் போக அலசி, சுடுநீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து, அதனுடன் துருவிய பூசணி, பச்சை மிளகாய் விழுது, ஓமம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை இதில் போட்டுப் பிசையவும். இந்த மாவை கையால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்டில் பக்கோடா மாதிரி கிள்ளிக் கிள்ளி வைத்து, வெயிலில் 2 நாட்கள் காயவிட்டு எடுத்து வைக்கவும்.

இதை சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

புதினா வடாம்

தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 4, புதினா (ஆய்ந்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, மையாக அரைக்கவும். 2 மணி நேரம் ஜவ்வரிசியை ஊறவைக்கவும். புதினா, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் (7-8 டம்ளர்) ஊற்றி கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். அரைத்து வைத்த அரிசி மாவு, புதினா விழுது ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கிளறவும் (கட்டித்தட்டாதவாறு, அடிபிடிக்காதபடி, கைவிடாமல் கிளறவும்). நன்றாக வெந்ததும்  இறக்கவும்.

மாவை பிளாஸ்டிக் ஷீட்டில் கரண்டியால் வட்டமாக ஊற்றி, வெயிலில் காயவிட்டு, மாலை அதை உரித்து திருப்பி போட்டு, காயவிடவும். 2-3 நாட்கள் வெயிலில் காயவிட்டு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

சிவப்பரிசி வடாம்

தேவையானவை: சிவப்பு புழுங்கல் அரிசி - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்ட தும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நீர் விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிளறவும். இத னுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மாவு மேலே தெறித்து விழாமல் கவனமாக கிண்டி (தீயைக் குறைத்து வைக்கவும்) வெந்ததும் இறக்கவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவைப் போட்டு, சுத்தமான துணி (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் பிழிந்து, வெயிலில் வைத்து, திருப்பிப் போட்டு 2, 3 நாட்கள் காயவிட்டு எடுக்கவும். 

இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நீள வடாம்

தேவையானவை: சாதம் - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள், ஓமம் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். முறுக்கு அச்சின் உள்ளே எண்ணெய் தடவி இக்கலவையைப் போட்டு, பெரிய பாலித்தீன் கவர் மீது நீள நீளமாக பிழிந்து, 5 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

இந்த வடாமை 10 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இடியாப்ப வடாம்

தேவையானவை: இடியாப்ப மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 4 (விழுதாக அரைக்கவும்),  தண்ணீர் - 3 கப், உப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, இடியாப்ப மாவைப் போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். இட்லிப் பானையில் அடியில் ஒரு கப் நீர் விட்டு, அதன் மேல் இட்லி தட்டு வைத்து, எண்ணெய் தடவி (அ) துணி போட்டு, ஓமப்பொடி அச்சில் வெந்த இடியாப்ப மாவை போட்டு ஒவ்வொரு இட்லி குழியிலும் பிழிந்து மூடி வைத்து, 10-15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, வெயிலில் காயவிட்டு எடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய்

தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் - தலா கால் கப், நறுக்கிய பாகற்காய் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 15, வினிகர் - கால் கப், கடுகு எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). நறுக்கிய காய்கறிகளுடன் இந்தப் பொடியை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பெரிய பாட்டில் (அ) பாத்திரத்தில் நன்கு குலுக்கி கலந்து கொள்ளவும். பிறகு வினிகரையும், எலுமிச்சைச் சாற்றையும் அதில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கடுகு எண்ணெய் அதன் மீது ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்திருக்கவும் (நடுநடுவே குலுக்கவும்). காய்கறிகள் அந்த கலவையில் நன்கு ஊறிய பிறகு, இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.

வடுமாங்காய் ஊறுகாய்

தேவையானவை: பிஞ்சு மாங்காய் (வடுமாங்காய்) - அரை கிலோ, கடுகுப் பொடி - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 25 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு இதை நல்லெண்ணெயில் புரட்டி... கடுகுப் பொடி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். 3 நாட்களிலேயே மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவை அலாதியாக இருக்கும்.

தயிர் சாதம் - மாவடு காம்பினேஷனை அடித்துக்கொள்ள முடியாது. இது, 3 மாதங்கள் கெடாது.

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 15, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை நன்றாக கழுவி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறவைத்து கொட்டையை நீக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விடாமல் கடுகு (ஒரு டீஸ்பூன் மட்டும்), சீரகம், வெந்தயத்தை வறுத்து பொடி செய்துகொள்ளவும். வெந்த கீற்றாக உள்ள நெல்லிக்காயில் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து கரண்டியால் கிளறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மீதம் உள்ள கடுகை தாளித்து, நெல்லிக்காய் சேர்த்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வறுத்துப் பொடித்த பொடி, மிளகாய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறி, அடுப்பை அணைத்து இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

கத்திரிக்காய் ஊறுகாய்

தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை 
அளவு, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, (சிறிது சிறிதாக கிள்ளிக்கொள்ளவும்), எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை: கத்திரிக்காயைக் கழுவி, துடைத்து, நீளவாக்கில் வெட்டவும். புளியைக் கெட்டியாக கரைத்து உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி சேர்த்து, கத்திரிக்காயில் ஊற்றிக் கரண்டியால் கிளறவும். ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் இந்தக் கரைசலை வடிகட்டி, காயை வெயிலில் காயவிட்டு எடுக்கவும். சிறிதளவு எண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றிக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை தாளித்து, எண்ணெய் கலந்த கத்திரிக்காயில் சேர்த்தால்... ஊறுகாய் ரெடி! இதை அவ்வப்போது அப்படியே வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். 

இந்த ஊறுகாயை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.

எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சை பழம் - 15, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சை பழத்தை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி அதில் பழத்தைப் போடவும். 10 நிமிடம் அப்படியே மூடிவைக்கவும் (பழம் நன்றாக சுடுநீரில் மூழ்கி இருக்க வேண்டும்). உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்துவைக்கவும். பிறகு எலுமிச்சையை நீரில் இருந்து வெளியே எடுத்து கத்தியால் 4 ஆக கீறி, அதனுள் கலந்துவைத்த பொடியை அடைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். அப்படியே ஒரு வாரம் ஊறவிட்டு, பிறகு உபயோகப்படுத்தவும்.

வெங்காய ஊறுகாய்

தேவையானவை: சின்ன வெங்காயம் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெயில் வதக்கவும். இதனுடன் தனியா, உப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து 
வரும்போது அடுப்பை நிறுத்தவும்.

ஊறுகாயை ஆறவிட்டு, பாட்டிலில் போட்டு வைக்கவும். இதை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் - 100 கிராம், இஞ்சித் துருவல் -  2 டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், கடுகு எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, மாங்காய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக கடுகு எண்ணெயை அதன் மீது ஊற்றி குலுக்கிவிடவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்து, சாப்பிடும்முன் பாட்டிலை குலுக்கிவிட்டு பயன்படுத்தவும்.

இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

கிடாரங்காய் ஊறுகாய்

தேவையானவை: பழுத்த கிடாரங்காய் - 3, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கிடாரங்காயை பொடிப் பொடியாக நறுக்கவும். இதை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு சேர்த்து 7 - 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... ஊறிய கிடாரங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். 

இது 2, 3 மாதங்கள் நன்றாக இருக்கும். இனிப்பு சுவை பிடிக்காத வர்கள் வெல்லம் சேர்க்காமலும் செய்யலாம்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை: பூண்டு - ஒரு கப் (உரித்தது), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை பழ அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, தனியா, வெந்தயம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தனியா, வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து சிவக்க வதக்கி... புளிக் கரைசலை ஊற்றவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, செய்து வைத்திருக்கும் பொடியைத் தூவவும். நன்றாக சுண்டி, எல்லாம் ஒன்றாக கலந்து வந்தவுடன் இறக்கி ஆறவிட்டு, காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.

இஞ்சி இனிப்பு ஊறுகாய்

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, புளி - எலுமிச்சை பழ அளவு உருண்டை, பச்சை மிளகாய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, கீறிய பச்சை மிளகாயைப் போட்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது பொடித்த வெல்
லத்தை சேர்த்துக் கிளறி, ஆறவிட்டு எடுத்து பயன்படுத்தலாம்.

இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்

தேவையானவை: தக்காளி - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை -  சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மசித்த தக்காளி, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து நன்றாக வதக்கவும். இக்கலவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொதித்து, சுருள வதங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த தக்காளி ஊறுகாயை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சாதத்துடன் சேர்த்து

டீ

பட்டை இஞ்சி டீ!

கொழுப்பை வற்றவைத்து, உடல் எடையை குறைக்கும்
உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி, பலவற்றை முயற்சித்து தோல்வியில் தொவண்டு போனவர்கள் பலர். அப்படி எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி டீயில் தேன் கலந்தது குடியுங்கள்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன்,  பட்டை,  இஞ்சியில் உள்ளது. அதனால் தான் அசைவ உணவுகளுக்கு பட்டை சேர்கின்றனர்,  இது மேலும் ஜீரண சக்தியை துண்டுகிறது. இஞ்சி மற்றும் பட்டை உடல் எடையை விரைவில் குறைக்கும்  மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள் விரைவில் உடலில் மாற்றம் ஏற்படும்.

தேவையான பொருட்கள்:

பட்டை – 2
இஞ்சி – சிறிய துண்டு
ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 2 துண்டுகள்
புதினா – 5-6 இலைகள்
தேன் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்.
++++++++++++++++++++++

ப்ரூட் கேசரி

ப்ரூட் கேசரி
Image result for கேசரி
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
ஆப்பிள் - 1 /2 கப்
அன்னாசி - 1 /2 கப்
மாம்பழம் - 1 /2 cup
திராட்சை - 100 கிராம்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - 1  கப்
முந்திரி - 1 /4 கப்
உப்பு -1 சிட்டிகை
ஏலக்காய் - 2  சிட்டிகை

செய்முறை:

1.முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

2.கடாயில் முன்று  மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை  சிறு தியில்  வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

3.ஆப்பிள், அன்னாசி,  திராட்சை மாம்பழதோல் சிவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

4.ஆப்பிள், அன்னாசி,  திராட்சை மாம்பழம துண்டுகளை சக்கரையில் சேர்த்து 1 மணி நேரம் உறவிடவும் .

5.பால் மற்றும் தண்ணீரை,    சேர்த்து கொதிக்கவைக்கவும்.

6.தண்ணீர் நன்றாக  கொதிவரும் போது, ரவையை சிறிது சிறிதாக  சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.

7.ரவை முக்கால் பாகம் நன்றாக வெந்த பிறகு உப்பு சக்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.

8. பின் வருத்த முந்திரி  சேர்த்து கிளறவும்.

9.சுவையான  ப்ரூட் கேசரி ரெடி

பழக்கூழ / மில்க் ஷேக்

வாழைப்பழம் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் :

கனிந்த வாழைப்பழம் -3
மாம்பழம் - 2 துண்டுகள்
பால்  - 250 மில்லி
வென்னிலா எசன்ஸ்
பணங்கற்கண்டு - 100 கிராம்

செய்முறை :

1. வாழை பழத்தை துண்டு துண்டுகளாக நறுக்கவும்.

2.  பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.

3. மிக்சியில் குளிர்ந்த பாலை ஊற்றி எசன்ஸ் சில துளிகளை ஊற்றி நன்கு அடிக்கவும்.

4. அந்த பாலை பிரிசரில் வைத்து இரண்டு மணிநேரம் குளிரவிடவும்.

5. மிக்ஸியில் கனிந்த பழத்தை + மாம்பழ துண்டுகளை சேர்ந்து மையாக அரைக்கவும்.

6. இப்பொழுது குளிர்ந்து கெட்டியாக உள்ள பாலை சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

7. பழக்கூழை டம்ளரில் ஊற்றி மேலே நட்ஸ் மற்றும் டியூட்டி பூரூட்டி போட்டு பரிமாறவும்.

லட்டு / உருண்டை


பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

கருப்பு உளுந்து லட்டு

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வெல்லம் -   3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1.முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க
வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

++++++++++++++++++++++++++++++++++
கம்பு உருண்டை

தேவையானவை:

 கம்பு மாவு - ஒரு கப்
 கருப்பட்டி - ஒன்றரை கப்
 நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

கம்பு மாவை, எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை அடி பிடிக்காமல் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். கருப்பட்டியைத் தூள் செய்து, கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாண‌லியில் சேர்த்து, கூடவே 50 மில்லி தண்ணீர் விட்டு கருப்பட்டியைக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இனி, சூடான பாகுடன் மாவைக் கலக்கவும். முதலில், கரண்டியால் கிளறி, பின்னர் கையால் கவனமாக பதம் வரும் வரை பிசிற வேண்டும். உருண்டை பதம் வரும்போது கையால் உருண்டை பிடிக்கவும். உருண்டை பிடித்தால் உடையக் கூடாது. உருண்டை பிடிக்கும் போது கைகளில் நெய்யைத் தடவிக்கொண்டு உருண்டை பிடித்தால், உருண்டை வாசனையாகவும், கைகளில் ஒட்டாமலும் வரும்.

குறிப்பு:

கம்பை முளைக்கட்ட வைத்து நன்கு வெயிலில் காய வைக்கவும். பிறகு, மெஷினில் கொடுத்து கம்பு மாவாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக்கொண்டால், நீண்ட நாட்கள் கெடாது. பலவித உணவு வகைகளை இதில் தயார் செய்யலாம்.
+++++++++++++++++++++++++++++++++++
பாதம் பருப்பு லட்டு:

தேவையான பொருள்கள்

பாதாம் பருப்பு  -  20
பாசி பருப்பு   - அரை கிலோ
சர்க்கரை  -  அரை கிலோ
கிஸ்மிஸ் பழம்    -  10
நெய்  - 100 கிராம்

செய்முறை

பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில்

வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து   ஒரு தாம்பாளத்தில்  கொட்டி   அதனுடன்    நெய்யில்  வறுத்த  கிஸ்மிஸ் பழம்     சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்


பின்பு   கடாயில்  நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி  சூடாக இருக்கும் போதே சிறு   உருண்டைகளாகப்  பிடிக்கவும்.

     புரதச்சத்து  நிறைந்த லட்டு ரெடி
+++++++++++++++++++++++++++++
எள்ளு லட்டு

400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.

எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்:

நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.

இயற்கை இனிப்பு லட்டு

முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.

பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம்.  லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம்.  ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.

வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு

300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம்.  தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.    

பலன்கள்:

பசியைப் போக்கும்.  உடலுக்கு தெம்பைக்கூட்டும்.  உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.  போஷாக்கு நிறைந்த உணவு.

இயற்கை உணவுகள்

இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! --உணவே மருந்து

உணவே மருந்து, மருந்தே உணவு. ஆனால், இந்த 50 ஆண்டுகால இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக்கொண்டிருக்கிறோம். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டுக் வயிற்றை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறி கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை.

முறையற்ற உணவுப் பழக்கத்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.

இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் தரும் சமைக்காத இயற்கை உணவு வகைகளும், சித்த மருத்துவர் சிவராமன் சொல்லும் உடல் உபாதைகளைப் போக்கும் உன்னத உணவு முறைகளும் இணைந்து தரப்பட்டுள்ள இந்த சத்தான கையேடு, உங்களை ஈடில்லா ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன், நிச்சயம் உடலுக்கு வலுவூட்டுபவையாகவும் இருக்கும்.

சமைக்காத இயற்கை உணவுகள்

 ''சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள் மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.

இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள்.  வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகள்.

நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை. எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாற தயங்க வேண்டாம்.'' என்கிற இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல், இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை வைத்து சமைக்காமல் சாப்பிடும் முறைகளையும், பலன்களையும் பட்டியலிடுகிறார்.

கீர் வகைகள்

முளை கோதுமை தேங்காய்பால்

விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடவும்.  இதைக் காயவைத்து வறுத்து அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.  தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்தும் பருகலாம்.  அற்புதமான சுவையுடன் இருக்கும்.

பலன்கள்:

புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும்.  உடல் பலம் பெருகும்.  உயர் ரத்த அழுத்தம் குறையும்.  உடல் பருமன், தொப்பை, ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.

பேரீட்சை கீர்

200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.

பலன்கள்:

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிஃபனாக சாப்பிடலாம்.  ரத்தம் விருத்தியாகும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்.

காரட் கீர்

500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்.  2 மூடி தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200 கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.

பலன்கள்:

கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கலாம்.  தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும். குடல் புண் சரியாகும்.

முளை தானிய பயிறு வகைகள்!

எட்டு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளை சாப்பிடுவதால், குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெற முடியும்.  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது.  முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும்.  கூடிய வரையில் ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.

பச்சைப்பயறு

நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும்.  காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.  

பலன்கள்:

அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்.  அல்சரைக் கட்டுப்படுத்தும்.  சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முளைக்கட்டிய வெந்தயம்

சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப் பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.

பலன்கள்:

கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

கொள்ளு முளைப்பயறு

நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.

பலன்கள்:

அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.

முளைவிட்ட எள், வேர்க்கடலை

பலன்கள்:

மிகவும் மெலிந்த உடல் இருப்பவர்கள் முளைக்கட்டிய எள், வேர்க்கடலையைத் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.  அகோரப் பசியை போக்கி, ஊட்டச்சத்தையும் தரும். கடின உழைப்பாளிகளுக்கும், துள்ளித் திரியும் வளரும் பிள்ளைகளுக்கும் மிக நல்லது.

கம்பு முளைப்பயறு

கம்பை 8 மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைக்கவிடவும்.  அடிக்கடி ஒரு கைப்பிடி சாப்பிட்டு வரலாம்.  அரைத்துப் பாலாகவும் அருந்தலாம்.  கூழாக்கி, கஞ்சியாகவும் சாப்பிடலாம்.

பலன்கள்:

பலம் கூடும்.  ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள், தினமும் சாப்பிட உடல் உறுதிப்படும்.

லட்டு வகைகள்

எள்ளு லட்டு

400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.

எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்:

நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.

இயற்கை இனிப்பு லட்டு

முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.

பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம்.  லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம்.  ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.

வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு

300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம்.  தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.    

பலன்கள்:

பசியைப் போக்கும்.  உடலுக்கு தெம்பைக்கூட்டும்.  உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.  போஷாக்கு நிறைந்த உணவு

துவையல் வகைகள்

பீட்ரூட் துவையல்

250 கிராம் பீட்ரூடைக் கழுவி தோல் சீவி, நைஸாகத் துருவிக்கொள்ளவும்.  100 கிராம் இஞ்சியை தோல் சீவி நறுக்கிச் சாறு எடுக்கவும்.  சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.  சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.  தேவைப்பட்டால் பிளாக்சால்ட் சேர்க்கலாம்.

பலன்கள்:

அனைவரும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அமிலத்தன்மை, மலச்சிக்கல், பசியின்மையைப் போக்கும். தொப்பையைக் குறைக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வாயுப் பொருமல் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேன்சரைக் குணப்படுத்தும் உணவுகளில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரில் கலந்தும், சாதத்துடன் பிசைந்துச் சாப்பிடலாம்.

கொத்தமல்லித் துவையல்

500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும்.

பலன்கள்:

மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும்.  அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.  தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும்.  ரத்தம் விருத்தியடையும்.

 நெல்லிக்காய் துவையல்

250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.

பலன்கள்:

ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும்.  இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.  

சாலட் வகைகள்

காய்கறி சாலட்

காரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கோஸ், வெண்பூசணி, புடலை, பீர்க்கை, சௌசௌ, முள்ளங்கி, சுரை இவற்றை தீக்குச்சி வடிவில் சிறியதாக நீட்டமாக நறுக்கவும். இந்தக் கலவை 200 கிராம் இருக்கட்டும்.  கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து நறுக்கிய காய்கறிகளுடன் கலக்கவும்.  இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைசாறு, பிளாக் சால்ட், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் கலந்தால், அருமையான சாலட் தயார். பல் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். இதனுடன் முளை தானியங்களும் சிறிது சேர்க்கலாம். இனிப்புக் காய்கறி கலவைத் தேவைப்படுபவர்கள், வெல்லம் சிறிது கலந்து கொள்ளலாம்.

பலன்கள்: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தொப்பை உள்ளவர்கள் தினமும் அவசியம் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உடல் சூடு, மூல நோய் மறையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் குறையும். அஜீரணக் கோளாறு இரண்டே நாட்களில் சரியாகும். மூட்டுவலி குறையும். நரம்புகள் வலுப்பெறும்.

ஃப்ரூட் சாலட்

ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பாப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா இவை கலந்த கலவை தலா 500 கிராம் எடுத்து நன்றாகக் கழுவவும்.  தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொட்டைகளை நீக்கவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும்.  எல்லாப் பழங்களையும் கலந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலாம்.  இதை உணவுக்கு முன் சாப்பிடலாம்.

பலன்கள்: மலச்சிக்கல், குடல்புண், பசியின்மை விலகும்.  உடலுக்கு உடனடி சக்தி தரும்.  சிறுநீர் எரிச்சல், நீர் பிரியாமை உடலின் மூலச்சூடு குறையும்.

வெள்ளரிப் பச்சடி

வெள்ளரி, காரட்டை நீளவாக்கில் நறுக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும்.  இதனுடன் தயிர், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதேபோல், வெங்காயம், வெண்பூசணி, சுரைக்காய், சௌசௌ போன்ற பல வகைப் பச்சடிகளை தினம் ஒன்றாகச் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்: அதிக அமிலங்களால் அவதிப்படும் உடலுக்கு வெள்ளரியே மாமருந்து. குடல் புண் சரியாகும்.  ஒபிசிட்டி பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கல்அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்துசாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், மூல நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம்.  தோல் நோய் பிரச்னையும் தீரும்.

கருந்துளசி சாறு

கருந்துளசியை 150 கிராம் எடுத்து இலைகளைக் கிள்ளி நீரில் கழுவி நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.  இதனுடன் நாட்டு வெல்லம் அல்லது தேன் சேர்த்து, கலந்து, தினமும் ஒரு நபர் 5 கிராம் முதல் 10 கிராம் வரை அருந்தலாம்.

பலன்கள்:  அமிலத்தன்மை நீக்கும்.  சளி, இருமல், தோல் பிரச்னை, பிரைமரி காம்ளெக்ஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்றவை சரியாகும்.  குரல் வளம் பெருகும்.  காய்ச்சலைப் போக்கும் அரிய சாறு இது.

வெஜிடபிள் அவல் மிக்ஸ்

அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.  வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு எடுக்கவும்.

ஊறிய அவலுடன் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.

பலன்கள்:  சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

''நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்'' என்கிற சித்தமருத்துவர் சிவராமன், நோய்களுக்கேற்ற உணவுமுறைகளையும் விளக்குகிறார்.
வாதம்/பித்தம்/கபம்

வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள்.  இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.

சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.

பித்தம்:

பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும்.  அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு.

சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது.  கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும்.  இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.  கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.

கபம்:

சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.

சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும்.  கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.
தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்

சளி / இருமல்:

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும்.  இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.

சேர்க்கவேண்டியவை:  இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம்.  இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும்.  மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால்,  தவிர்க்கவும்.  எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது.  இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.

காய்ச்சல்:

காய்ச்சல் - எந்த ஒர் இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும்.  எனக்குக் காய்ச்சலே வந்ததில்லை என எவரும் சொல்ல முடியாது.  ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனிநோய் இல்லை.  வேறு ஏதேனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறிதான்.  'லங்கணம் பரம ஒவுஷதம்’ என்று ஒரு மருத்துவ மொழி உண்டு.  அதன் பொருள், 'காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’ என்பதுதான்.

சேர்க்கவேண்டியவை: எளிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி மட்டும் குறைவாக எடுப்பது நல்லது.  வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம்.

நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.

குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 - 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.  அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை கொடுங்கள்.

வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.  வேப்பம்பூ ரசம் நல்ல பலன் தரும். நிலவேம்புக் குடிநீரை வாங்கி வீட்டில் அனைவரும் தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 60- 90 மிலி கஷாயம் வைத்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடலாம்.

தவிர்க்கவேண்டியவை: உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.

 சிறுநீரக பாதிப்பு

சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக் கவனம் தேவை.

சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.  பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.

தவிர்க்கவேண்டியவை: அதிக உப்பு, சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது.  கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளதால் தவிர்க்கவும்.

நுரையீரல் அலர்ஜி, தொற்று மற்றும் சுற்றுச்சூழலால் ஆஸ்துமா அலர்ஜி ஏற்படுகிறது.

சேர்க்கவேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம்.  நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.

தவிர்க்கவேண்டியவை: மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சௌசௌ, தயிர் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.  படுக்கைக்குப் போகும்போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும். இனிப்புப் பண்டங்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை மருந்து எடுத்து வரும் காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல நோய்களுக்கான நுழைவாயில். காலையில், எவ்வித மருந்துகளின் உதவியில்லாமல் எவ்வித சிரமுமின்றி மலம் கழித்தல், நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.

சேர்க்கவேண்டியவை: நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மாலை வேளையில் 12 காய்ந்த திராட்சை கொடுப்பது நல்லது.  இரவு உணவில் ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். வாழைத்தண்டு பச்சடி, பாசிப்பயறு சேர்த்து சமைத்த கீரை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத முழுக் கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

தவிர்க்கவேண்டியவை: பீட்சா, பர்கர் மற்றும் பரோட்டா போன்ற கடின உணவுகளை சாப்பிடக் கூடாது.

சர்க்கரை நோய்

இனிப்பு மற்றும் பாலிஷ் தானியங்களின் அதிகப்படியான உபயோகம், உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவு போன்றவையே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்கள்.

சேர்க்கவேண்டியவை: கத்தரிக்காய், கோவைக்காய்.




கீரை

 கீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

கீரை - ஒரு கட்டு
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

* கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.,

* கோதுமை மாவுடன் கீரை, வெங்காயம், ப.மிளகாய், சீரகம், உப்பு, கரம்மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

* பிறகு மாவை சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விடவும்.

* கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.

* கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகி விடும்.

* சுவையான சத்தான கீரை சப்பாத்தி ரெடி.

* வெந்தயக்கீரையையும் இதே முறையில் செய்யலாம்.

அவியல்

கன்னியாகுமரி அவியல் கூட்டு
Image result for கன்னியாகுமரி அவியல்


அவியலுக்குத் தேவையான காய்கறிகள்:
முருங்கைக்காய் - 2
பூசணிக்காய் - அரை கீற்று
சேனைக்கிழங்கு - 100 கிராம்
கத்திரிக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 100 கிராம்
வாழைக்காய் - ஒன்று
காரட் - ஒன்று
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 6
மாங்காய் - 4 துண்டுகள்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
முருங்கைக்காயை ஒன்றரை அங்குல நீளத்துண்டுகளாகவும், வாழைக்காய் தவிர மற்ற காய்களை அரை அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைக்காயின் மேல் தோலைச் சீவி சற்று பருமனான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
காய்கறிகளுடன் உப்பு, தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கள் அரைப்பதத்தில் வெந்ததும் மாங்காய் துண்டுகள் சேர்த்து கிளறி மூடி வைத்து முக்கால் பதமானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.
தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு, கடைசியில் சாம்பார் வெங்காயம் ஒன்றிரண்டாக தட்டி எடுக்கவும்.
அரைத்தவற்றை காய்கறியில் போட்டு நன்கு கிளறி மறுபடியும் அடுப்பில் வைத்து வேக வைத்து, கலவை நீர்க்க இல்லாமல் கெட்டிப்பட்டதும் இறக்கி விடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தாளித்ததை அவியலில் கொட்டிகிளறி இறக்கவும்.

முறுக்கு

புழுங்கலரிசி முறுக்கு

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
புழுங்கல் அரிசிகால் கிலோ
பொட்டுக்கடலைஅரை கப்
காய்ந்த மிளகாய்10- 15
தேங்காய்ப்பால்ஒரு கப்
எள்2 டீஸ்பூன்
ஓமம்3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்3 சிட்டிகை
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :

  அரிசியை நீர் விட்டு நன்றாக ஊறிய பிறகு களைந்து அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு கிரைண்டரில் மைய அரைக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக மாவாக்கி கொள்ளவும்.

  அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, மாவினை பெரிய சல்லிக் கரண்டியின் மேல் பாகத்தில் பிழிந்து அதனை எண்ணெயில் போடவும்.

  சல்லிக்கரண்டியின் மேல் எண்ணெய் தடவினால் கரண்டியினை திருப்பும் போது எளிதாக மாவு எண்ணெயில் விழுந்து விடும். மாவு சிவந்ததும் எடுத்தால் புழுங்கலரிசி முறுக்கு தயார்.
++++++++++++++++++++++++++++++++
அச்சு முறுக்கு

தேவையானப்பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு "அச்சப்பம்" என்றும் "ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.
+++++++++++++++++++++++++++++
உளுந்து - ஒரு கப்

அரிசி மாவு - 3 - 3 1/2 கப்

எள் - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரித்தெடுக்க

முறுக்கு செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உளுந்தை நன்றாக கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (உளுந்து : தண்ணீர் = 1:3). வேக வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உளுந்து நன்றாக மசிந்துவிடும்.

அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, எள், சீரகம், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு 3 முதல் 3 1/2 கப் அளவு தேவைப்படும்.

முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு முறுக்குக்காக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.

எளிதில் செய்துவிடக்கூடிய சுலப முறுக்கு ரெடி.
++++++++++++++++++++++++++++++
பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)

உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)

காய்ந்த மிளகாய் -- 10 என்னம்

கட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)

வெண்ணைய் -- 1/2 கப்

உப்பு -- தே.அ
எண்ணை


அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.

காய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

பின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.

பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்

Thursday, 26 May 2016

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அதனை சீசன் கிடைக்கும் போது வாங்கி ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டால் வெகு நாளுக்கு வைத்து சாப்பிடலாம்.

தேவையானவை

முழு நெல்லிக்காய் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை கப்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 கப்

பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.

கடுகு பொரிந்ததும் நெல்லிக்காய் போட்டு வதக்கவும், நெல்லிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5 நாட்கள் கழித்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

Wednesday, 18 May 2016

காளான் பிரியாணி.

காளான் பிரியாணி.

தேவையான பொருட்கள்
காளான்(மஷ்ரூம்)  – 150 கிராம்
பாஸ்மதி அரிசி  –  1 கப்
அரைக்க
வர மிளகாய்  –  2
பட்டை – 2  1 ” துண்டு
கிராம்பு – 2
அனாசி பூ – 1
சோம்பு  – 1 /2  தேக்கரண்டி
பூண்டு  – 7  பல்
இஞ்சி –  4  துண்டு
தாளிக்க
பிரியாணி இலை – 2
பட்டை –   2 துண்டு
கிராம்பு –  2
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம்  –  1
தக்காளி  –  1
புதினா –  10 இலைகள்
நெய்  –  1 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் –  1 தேக்கரண்டி
செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில்  இஞ்சி, பூண்டு தவிர மீதமுள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் வறுத்து, இஞ்சி, பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக  நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காளானை மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
குக்கரில்  நெய் மற்றும்  எண்ணெய்  ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,புதினா ஆகியவற்றை முதலில் போடவும்.
பின்னர்  வெங்காயத்தை  சேர்த்து  பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு காளானை சேர்த்து வதக்கி, மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
காளானில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக வற்றி, காளான் சுருங்கும் வரை வேக விடவும்.
அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
காளான் முக்கால் பக்கம்  வெந்த பின்னர், அரிசியை அதில் சேர்த்து, மசாலாவோடு  சேருமாறு நன்கு கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் (2  கப் தண்ணீர்) ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி, குக்கர்  மூடியை மூடி விடவும்.
ஒரு விசில் முடிந்து, இரண்டாவது விசில் வர இருக்கும்போது தீயை  அணைத்து விடவும்.
குறிப்பு
காளான் பிரியாணிக்கு தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
மசாலா அரைத்து பொடி தயாரிக்க நேரமில்லாதவர்கள், கறி மசாலா மற்றும் மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

செட்டிநாடு புளிக்குழம்பு

செட்டிநாடு புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்(தோல் உரித்தது ) – 1/2 கப்
பூண்டு (தோல் உரித்தது) – 10 பல்
புளி (சிறிய எலுமிச்சை அளவு )
சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) – 2-3 தேக்கரண்டி
தக்காளி – 2(பொடியாக நறுக்கியது )
வெங்காய கறி வடகம் – 1/4கப்
தாளிக்க
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
செய்முறை
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் சாம்பார் தூள் அல்லது குழம்பு தூள் சேர்த்து வதக்கி, புளி கரைசலை சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
ஒரு சிறு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு என்னை ஊற்றி வெங்காய கறி வடகத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த வடகத்தை குழம்பில் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் குழம்பை இறக்கவும்.
செட்டிநாடு புளிக்குழம்பு இட்லி, தோசை, சாதம் அனைத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

செட்டிநாடு வெஜிடபிள் கறி

செட்டிநாடு செய்முறையில் வெஜிடபிள் கறி செய்வதற்கான குறிப்பு.இந்த சமையல் குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.
தேவையான பொருட்கள்
பச்சை நிற கத்திரிக்காய்  – 200  கிராம்
உருளைக்கிழங்கு – 200  கிராம்
பெரிய வெங்காயம்  –  2
பீன்ஸ்  – 100 கிராம்
முட்டைக்கோஸ்  – 150 கிராம்
பட்டாணி  – 150 கிராம்
எண்ணெய்  – வதக்க
உப்பு  – தேவைக்கேற்ப
கடுகு  – 1 /4 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
அரைத்துக் கொள்ளவும்
கசகசா  –  1 1 /2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்  – 8
மிளகு  – 1 /4  தேக்கரண்டி
இஞ்சி  –  1 /2 அங்குலத்துண்டு
பூண்டு  – 8 பல்லு
சின்ன வெங்காயம்  – 1  கப்
சீரகம்  – 1  தேக்கரண்டி
சோம்பு  – 1 / 4 தேக்கரண்டி
செய்முறை
பச்சை நிற கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , பீன்ஸ், முட்டைக்கோஸ் எல்லாவற்றையும் நீளவாக்கில் அரியவும்.
பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கோஸ் இவற்றை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், கத்திரிக்காய் சேர்க்கவும்.
நன்றாக வதக்கிய பிறகு, அரைத்த மசாலா உப்பு சேர்க்கவும். நல்ல வாசனை வரும்வரை வதக்கவும்.
பிறகு வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து மிதமான தீயில் குழம்பு திக்காக வரும்வரை கொதிக்கவிடவும்.
குறிப்பு
செட்டிநாடு வெஜிடபிள் கறி இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்

புளியோதரை

புளியோதரை

என்னென்ன தேவை?

பொன்னி பச்சரிசி - 250 கிராம்,
புளி - ஆரஞ்சு பழ அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 12,
பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
மஞ்சள் தூள் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
வேர்க்கடலை - அரை கப்,
வெல்லம் - கோலி அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் (கொடுக்கப்பட்டுள்ள அளவில் எல்லாம் பாதிப் பாதி)  வறுத்து, கரகரப்பாகப் பொடித்துத் தனியே வைக்கவும். வேறொரு கடாயில் புளியைக் கரைத்துக் கொதிக்க விடவும். அதில் மஞ்சள் தூள், உப்பு,  வெல்லம் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கி வைக்கவும். அரிசியை உதிராக வடித்து, 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, ஆற விடவும். மறுபடி  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலையை வறுத்து,  சாதத்தில் கொட்டி, தேவையான அளவு புளிக்கரைசல் விட்டு, பொடித்து வைத்துள்ளதில் 2 டீஸ்பூன் தூவி, கிளறி, அரை மணி நேரம் கழித்துப்  பரிமாறவும்.

மசாலா பொரி

மசாலா  பொரி

தேவையான பொருட்கள்:
பொரி - ஒரி கப்
வேர்க்கடலை - ஒரு கப்
காரபூந்தி (அ) மிக்சர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பெங்களூர் தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
சிறிய எலுமிச்சை பழம் - ஒன்று

செய்முறை :
1.பொரி மற்றும் காரபூந்தியை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.

2.வேர்க்கடலையை வேக வைத்து தோலுரித்து தயாராக வைக்கவும்.

3.வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

4.ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழந்து நன்கு கிளறி விடவும்.

5.பொரி கலவையை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய மசாலா வேர்கடலை ரெடி.

காலிஃபிளவர்

காலிஃப்ளவர் போண்டா
தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1 கப்
கடலை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 கப் (பொரிக்க)
தண்ணீர் – 1 கப்

செய்முறை:

            முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

            பின்னர் ஓமம், மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, பச்சை மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

           பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

          சுவையான காலிஃப்ளவர் போண்டா ரெடி.
++++++++++++++++++++++
காலிஃபிளவர் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
MEDIUM SIZE CAULIFLOWER - 1
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகு - பொடித்தது - 1 டீ ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1/4
செய்முறை:
தேவையான பொருட்கள்: "காலிஃபிளவரை படத்தில் படத்தில் காட்டியுள்ளது போல் 1/4 கனத்திற்கு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். 6 வில்லைகள் வரும். (இவற்றை வெது வெதுப்பான உப்புக் கரைசலில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதிலுள்ள புழுக்கள் வெளியேறி விடும். பிறகு நீரை வடித்து, வில்லைகளை தனியாக எடுத்துக் கொள்ளவும்- கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்தால் புழுக்கள் அவை இருக்கும் இடத்திலேயே மடிந்து அங்கே தங்கி விடும்).
இதர பொருட்களை ஒன்றாக கலந்து அதில் காலிஃபிளவர் வில்லைகளை 10 நிமிடம் ஊற வைக்கவும் (MARINATE).
ஒரு தோசைக்கலில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி வில்லைகளை இரண்டு இரண்டாக வைத்து நன்றாக வறுத்து எடுக்கவும். இரு புறமும் இது போன்று செய்யவும்.
பிரியாணி வகைகள், அனைத்து வகை சலந்த சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது

ரவா கிச்சடி

வெஜ் ரவா கிச்சடி

தேவையான பொரு‌ட்க‌ள்
ரவை - அரை கிலோ
பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - இரண்டு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - ‌சி‌றிதளவு
பட்டை, லவுங்கம் - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
மஞ்சள் பொடி அ‌ல்ல‌து கேச‌ரி பொடி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
இஞ்சி, புண்டு விழுது - தேவை‌க்கே‌ற்ப
பச்சை மிளகாய் - நான்கு

செய்முறை:

பட்டாணி, பீன்ஸ், கேரட் ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும்.
வாண‌லி‌யி‌‌ல் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடு‌த்து‌க் கொள்ளவு‌ம்.
அதே வாண‌லி‌யி‌ல் ‌பிறகு ரவையை வறுத்து எடு‌த்து‌க் கொள்ள வேண்டும்.
வாண‌லி‌யி‌ல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வத‌‌க்கவு‌ம்.
‌பி‌ன்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி, பச்சை மிளகாயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.
பி‌ன்பு மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவு‌ம்.
எ‌ல்லா‌ம் ந‌ன்கு வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர் சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌ர் கொ‌தி‌க்கு‌ம்போதே ச‌ரியான அள‌வி‌ல் உ‌ப்பு போடவு‌ம்.
அதனுட‌ன் த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை கொ‌ட்டி‌க் ‌கிளறவு‌ம்.
நன்கு கிளறி ரவை வெந்தவுடன் வறு‌த்த மு‌ந்‌தி‌ரியையு‌ம், கொத்துமல்லியையு‌ம் தூவி பரிமாறவும்.

சுவையான வெஜ் ரவா கிச்சடி தயார். இத‌ற்கு உடை‌த்தகடலை ச‌ட்‌னி அருமையாக இரு‌க்கு‌ம்.

முருங்கைக்கீரை அடை

முருங்கைக்கீரை அடை

தேவையானவை:
 அரிசி - 500 கிராம்
 தக்காளி - 2
 பூண்டு - 5 பல்
 தேங்காய் - கால்மூடி
 சீரகம் - கால் டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 50 கிராம்
 பாசிப் பருப்பு - 50 கிராம்
 கடலைப் பருப்பு - 50 கிராம்
 காய்ந்த மிளகாய் - 2
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:
அரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மூன்று பருப்புகளையும் தனித்தனியாக  இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, பருப்புடன், காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், நறுக்கிய முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, இந்த மாவை ஊற்றி வார்த்து எடுக்கவும்.
குறிப்பு:
 அடைமாவை புளிக்க வைத்து சுட்டால், அடை சுவையாக இருக்காது. மாவு அரைத்து சுமார் அரை மணி நேரத்தில் அடையைச் சுடவும்.
 அடைதோசை, பணியாரம் சுடும்போது அதன் சுவை மொறு மொறுவென இருப்பதற்கு, பச்சரிசி மாவைச் சேர்க்கலாம். நம் தேவைக்கேற்ப ஊறவைக்கும் அரிசியின் அளவு அல்லது பாதியளவு பச்சரிசியைச் சேர்க்கலாம்.

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்:
உலர்ந்த வேப்பம் பூ இரண்டு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் ( தாளிப்பதற்கு)
மிளகு, சீரகம் ( பொடித்தது)
சிறிதளவு எண்ணெய்
புளி சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
முதலில் புளியை நீரில் கரைத்து உப்பு தேவையான அளவு போட்டுஅடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன்  பொடித்து வைத்த மிளகு சீரகப் பொடியை அதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இப்போது வாணலியில் வேப்பம் பூ மிளகாய் கடுகு, எண்ணெயுடன் தாளித்து ரசத்தில் ஊற்றவும்.
சுவையான வேப்பம் பூ ரசம் ரெடி.

குறிப்பு) இந்த மாதத்தில் வேப்பம் பூ பூக்க துவங்கும், சித்திரை வைகாசியில் நிறைய பூத்துக் கொட்டும். கொட்டும்போது பொறுக்கி தூசு நீக்கி நிழலில் உணர்த்தி எடுத்துவைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் பயன்படும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

சமையலறை சமாளிப்புகள் !!!!!!!!!

இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.

"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.

தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

...செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++
சமையலறை சமாளிப்புகள் !!!!!!!!!

இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.

"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.

தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

...செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++
சமையலறை குறிப்புகள்  !!!

● முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.
● தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.
● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.
● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.
● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..
● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
● தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
● துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++
1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்
++++++++++++++++++++++++++++++++
என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் ஃப்ரெஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டைச் சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாகப் பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு - நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

கத்தரிக்காய் வெண்டைக்காய், கோவைக்காய் பொரியல் செய்து முடித்தவுடன் கடைசியில் கொஞ்சம் கடலைமாவை தூவி கலந்துவிட்டால் டேஸ்டியாக இருக்கும்.

சில சமயம் கைக்குழந்தைகள் வயிற்றுவலி என்று அழும். அப்போது கறுப்பு வெற்றிலையை விளக்கெண்ணெய் தடவி லேசாக சூடுபடுத்தி குழந்தையின் தொப்புள் மீது போடவும். சில மணி நேரத்தில் குழந்தை சிரிக்கும்.

இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் ஒரு துண்டுவீதம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.

வீட்டின் கதவு ஜன்னல்களில் படிந்துள்ள அழுக்கை நீக்க சிறு துளி மண்ணெண்ணையை துணியில் விட்டு அழுக்கு படிந்த இடங்களில் தடவி ஊறவிட்டு  பின்பு வேறு துணியில் துடைக்க கதவு ஜன்னல்கள் பளிச்சிடும். பூச்சிகள் அண்டாது.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஊளைச்சதை குறையும்.