Tuesday, 31 May 2016

அவியல்

கன்னியாகுமரி அவியல் கூட்டு
Image result for கன்னியாகுமரி அவியல்


அவியலுக்குத் தேவையான காய்கறிகள்:
முருங்கைக்காய் - 2
பூசணிக்காய் - அரை கீற்று
சேனைக்கிழங்கு - 100 கிராம்
கத்திரிக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 100 கிராம்
வாழைக்காய் - ஒன்று
காரட் - ஒன்று
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 6
மாங்காய் - 4 துண்டுகள்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
முருங்கைக்காயை ஒன்றரை அங்குல நீளத்துண்டுகளாகவும், வாழைக்காய் தவிர மற்ற காய்களை அரை அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைக்காயின் மேல் தோலைச் சீவி சற்று பருமனான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
காய்கறிகளுடன் உப்பு, தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கள் அரைப்பதத்தில் வெந்ததும் மாங்காய் துண்டுகள் சேர்த்து கிளறி மூடி வைத்து முக்கால் பதமானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.
தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு, கடைசியில் சாம்பார் வெங்காயம் ஒன்றிரண்டாக தட்டி எடுக்கவும்.
அரைத்தவற்றை காய்கறியில் போட்டு நன்கு கிளறி மறுபடியும் அடுப்பில் வைத்து வேக வைத்து, கலவை நீர்க்க இல்லாமல் கெட்டிப்பட்டதும் இறக்கி விடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தாளித்ததை அவியலில் கொட்டிகிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment